Thursday, March 3, 2011

கொ.மு.க ஏன் இப்படிப்பட்ட தேர்தல் முடிவுகள்..?



 மார்ச் 3 : அதிமுக, திமுக இரு அணியிலும் சட்ட மன்ற தேர்தலுக்கு
கூட்டணி அழைப்பு வந்தது..!

அதிமுக தரப்பிலே அவர்கள் சொல்லியது:
கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் ஆதரவு தாருங்கள்,
ஆனால்,
உங்களுக்கு எந்த ஒரு தொகுதியும் தர முடியாது..!

அடுத்த ஆட்சி வரும் போது அதாவது இன்னும் 5 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு

2 அல்லது 3 தொகுதிகள் தருகிறோம்
என்று சொல்லுகையில்,

நம்முடைய ஆதரவு எதற்கு தர வேண்டும்..?
கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் ஆதரவு எதற்கு..?

இது தான் வருகிற சட்ட மன்ற தேர்தலுக்கு பேசுகிற தோரனையா..?
கொ.மு.க வின் அசுர வளர்ச்சியையும்,நன்மதிப்பையும் பற்றி தெரிந்தும் நடந்து கொள்ளும் விதமா..?
அதற்கு கொ.மு.கவிடம் அதிமுக பேசாமலே இருந்திருக்கலாமே..?
விஜயகாந்த் கட்சி வந்தவுடன் இப்படி நடந்து கொள்ளுவது ஒரு கேவலமான செயல்..?
விஜயகாந்த் கட்சி வருவதற்கு முன்பு கொ.மு.க இனித்ததோ..?

இப்படி பட்ட அடிப்படை பண்பும்,நாகரீகம் இல்லாதவர்களோடு கூட்டணி வேண்டாம் என்று கொ.மு.க தீர்மானித்தது..!

மறுபுறம்

திமுக தரப்பிலே அவர்கள் சொல்லியது:

நாங்கள் கொ.மு.க அசுர வளர்ச்சி,நன்மதிப்பையும்,செயல்பாடுகளையும் நன்கு அறிந்தவர்கள்..!
வாய் வழி பேசாமல் செயல் வழியிலே செய்து முடிப்பவர்கள் தான் கொங்குநாடு முன்னேற்ற கழகம்..!

நம் கோரிக்கைகளை கேட்டு அறிந்து
7 தொகுதிகளை கொடுத்து நல் ஆதரவும் தந்து உள்ளார்கள்.

அது போக,
நம்மை மிகவும் குறைவாக எடை போட்டு

கொங்குநாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காத

அகங்காரம்,
ஆனவம்,
அவம்பாவம்,
பிடித்த அதிமுக ஜெயலலிதாவுக்கு ஒரு நல்ல பாடம் புகட்டி,

நிற்கிற அத்தனை தொகுதிகளிலும் வெற்றி வாகை அணிந்து,
திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் என்ற
சுளுரை ஏற்போம்..!

3 comments:

  1. dmk ll not leave us to develop & surely they ll seat in amdk kotai so we'll fail in that place but dmk ll win with our support in other places,.. thats dmk's plan

    ReplyDelete
  2. dmk ...relationship is very dangers..........pangali.......

    ReplyDelete
  3. அன்பு நண்பரே,வணக்கம்.முதலில் நமக்குள் உள்ள பிரிவினையைக் களைந்தெறிய வேண்டும்.நாம் அனைவரும் ஓரணியாகத் திரள வேண்டும்.அதுவே நமது சமூகத்திற்கு பெரும் வெற்றியாக அமையும்.அதற்கான முயற்சிகள் எடுத்தால் ஒழிய எனது மனதில் என்ன இருக்கிறது? என்பதே தடுமாற்றமாக உள்ளது.paramesdriver.blogspot.com,,konguthendral.blogspot.com நன்றி!

    ReplyDelete