Tuesday, March 8, 2011

தலைவர் பிறந்தநாள் மற்றும் மாநில பொதுகுழு கூட்டம்


மார்ச் 8:  திருப்பூர் :  காலை  11 மணியளவில்  பெஸ்ட்  ராமசாமி அய்யா  அவர்களின்  66 வது பிறந்தநாள்  மற்றும் மாநில பொது குழு  கூட்டம்  நடைபெற்றது . கூட்டத்தில்  நமது  மாநில , மாவட்ட , ஒன்றிய , கிளை  நிர்வாகிகள்  கலந்து கொண்டனர் . கூட்டத்திற்கு  நமது கொங்குநாட்டு காவலர் திரு.பெஸ்ட் அய்யா ,  எழுச்சி  நாயகன் E .R . ஈஸ்வரன்  அண்ணன் , மக்கள் நாயகன்  பாலசுப்ரமணியம் , பேரவை  தலைவர்  தேவராஜ்  அய்யா  அவர்கள்  கலந்து கொண்டனர் . பிறகு நமது கொங்கு நாட்டு  காவலர்  பெஸ்ட் அய்யா அவர்களது 66 வது  பிறந்தநாள் கொண்டாட பட்டது .பிறகு  பொது  குழுவில்  நமது  மாநில  பொருளாளர்  பாலசுப்ரமணியம்  வரவேற்புரை  வழங்கினார் ...  பிறகு  நமது  மாநில  செயலாளர்  E .R .ஈஸ்வரன்  எழுச்சி உரை  ஆற்றினார் ... எழுச்சி  உரையில்  நமது  கூட்டணி   பற்றி  விரிவாக எடுத்துரைத்தார் ( ஒரு மாத காலம்  நானும்  நமது  மாநில பொருளாளரும்  சென்னையில்  நமது  கூட்டணி பற்றி இரு கட்சியிடமும்  பேசினோம், ஆதிமுக  நம்மை  மதிக்கவே  இல்லை , அவர்கள் நம்மிடத்திலே  பேச்சுவார்த்தை  நடத்திய  இடங்கள்  போயஸ் கார்டனில்  இருந்து 500  மீட்டர்  தள்ளிஉள்ள  ஒரு  சாக்கடை  பக்கத்தில்  ஒரு வாகனத்தில்  பேசினார்கள் , இதுவா நாகரீகம் . ஒரு மாதம்  நாம் ஆதிமுக விடையே  பேச்சுவார்த்தை  நடத்தினோம்  அனால் ஒரு தடவை  கூட அம்மாவை  சந்திக்கவே  இல்லை , கேட்டால் அம்மா பூஜையில்  இருக்கிறார்  அவரை பார்க்க முடியாது  என்று  கூறிவிட்டனர் ..ஒரு மாத காலம் அம்மா பூஜை  செய்து கொண்டே இருப்பரா ..என்னையா பதில்  இது .. பிறகு  நாம் திமுக விடத்திலே  பேச்சுவார்த்தை  நடத்தினோம் .. கலைஞர் இடத்திலே  சென்றதும்  கூட்டணி பேச்சுவார்த்தை  பற்றி  பத்திரிக்கைகளுக்கு  தெரிய வேண்டாம்  என்று  கூறினோம்  , பிறகு கலைஞர்  சரி என்று சொல்லி  இரவு  11  மணிக்கு  சந்திக்க ஏற்பாடுகள்  செய்திருந்தார் ... பிறகு  நானும்  நமது  தலைவரும் , பொருளாளரும் , பேரவை தலைவரும்  11  மணிக்கு  சென்றோம் ...கலைஞர்  இரவு 11  மணி வரைக்கும்  காத்திருந்தார் ...[கலைஞர்  எப்பொழுதும்  9  மணிக்கெல்லாம்  தூங்கிவிடுவார் ]  நம்மை  மதித்து  இரவு 11 மணி வரை காத்திருந்தார்...பிறகு  மார்ச் 1 ஆம் தேதி  வரை  ஆதிமுக  கூப்பிடவே இல்லை...பிறகு  திமுக தரப்பிலே நாளை இரவு காங்கிரஸ்     கூட்டணி  முடிவதற்காக  குலாப் நபி  வருகிறார்  அதனால்  நாளையுடன்   கூட்டணி  ஒதுக்கிடுகள்  முடிவடைந்துவிடும் ...அதனால் நாளை  இரவுக்குள்  உங்களின்  முடிவை  தெரிவிக்க  வேண்டும்  என்று கூறினார்கள் ...பிறகு  மார்ச் 2 ம் நாள்  மாநில செயற்குழு  கூட்டம்  சென்னையில் நடைபெற்றது ...கூட்டத்தில்  ஒருமித்த கருத்தோடு  திமுக வுடன்  கூட்டணி  அமைக்கலாம்  என்று முடிவானது . பிறகு  ஆதிமுக தரப்பிலே  இருந்து  தொலைபேசி  முலம்  நம்மை தொடர்பு  கொண்டு  நீங்கள் அவசரப்பட்டு  எந்த முடிவும்  எடுத்துவிடாதிர் .. மாதிமுக , கம்யூனிஸ்ட்  கூட்டணி  முடிந்த வுடன்  பார்த்து கொள்ளலாம்  என்று கூறினார்கள்  அனால் இன்று வரைக்கும்  அவர்கள்  கூட்டணியில்   சேரவில்லை ...இன்னும்  நாம்  காத்திருந்தால்  நமது  நிலைமையும்  இது தான் ...பிறகு இரவு 9 மணிக்கு அண்ணா அறிவாலயம்  சென்று  கூட்டணி ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர் ..நம்மை  பிற்படுத்த பட்டோர்  பட்டியலில்  சேர்பதாகவும், அவினாசி அத்திக்கடவு திட்டத்தை  நிறைவேற்றுவதாகவும் , சாயகழிவு பிரச்சனைக்கு  தீர்வு  காண்பதாகவும்  அவர்கள்  கூறினார்கள் )பிறகு  பெஸ்ட் அய்யா அவர்கள் பேசினார்கள் ...பிறகு  2. 30 மணிக்கு பொது குழு  முடிவடைந்தது ....கூட்டத்தின்  முடிவில்  நாம் அனைவரும்  திமுக  கூட்டணியுடன்  சேர்ந்து  அரும்பாடு பட்டு  வெற்றி பெறுவோம்  என்று  சபதம்  எடுக்கப்பட்டது.....

No comments:

Post a Comment